முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தளவாய்சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுக என்ற இயக்கம் நல்ல திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் மக்களுக்காக பணியாற்றி வந்தார்கள்.
இந்நிலையில், மக்களால் புறக்கணிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக எப்படியாவது மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை முன்வைத்து லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. முதலமைச்சர் பொறுப்பில் இருக்க கூடிய துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2026இல் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது நாடறிந்த உண்மை.மீண்டும் அதிமுகவை ஆட்சி அமையும்” என்றார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்