சர்வேதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், குடிநீர் வடிகால் வாரியம் பேரூராட்சிகளின் உயர் அலுவலர்கள் பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ”கன்னியாகுமரி பேரூராட்சிக்கு எந்த குளங்களில் இருந்து குடிநீர் கொண்டு வருவது பழுதான மோட்டார்களை சரி செய்வது என அனைத்து வேலைகளையும் முடித்து ஒரு வாரத்திற்குள் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் அனைத்து லாட்ஜ்களிலும் செப்டிக் டேங்க் அமைத்து கழிவு நீர் கடலில் கலக்காமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.