கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கீழதத்தையார்குளம் பகுதிகளில் வருமானம் இழந்து தவித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த குமார் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தொடர் ஊரடங்கால் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் அறிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்ய இன்னமும் ஒரு வருடம் ஆகும். அதுவரை மத்திய அரசு என்ன செய்யப்போகிறது ?
அதுபோல, விவசாயக் கடன், மாணவர் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
விழுப்புரத்தில் மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அந்த நபர்களுக்கு ஜாமீன், விசாரணை என்று போகாமல் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்