கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ராஜன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அந்தோணியுடன் மார்த்தாண்டம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்தோணி இருசக்கர வாகனத்தை ஓட்ட, சதீஷ் ராஜன் பின்புறத்தில் அமர்ந்து இருந்தார்.
இவர்களின் இருசக்கர வாகனம் தேங்காய்பட்டிணம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது லாரி ஒன்றை முந்தி செல்வதற்காக வேகமாகச் சென்றனர். அதே நேரத்தில் எதிரே வந்த தண்ணீர் பாட்டில்கள் ஏற்றி வந்த மினி டெம்போவில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தோணி பொதுமக்களால் மீட்கப்பட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதுக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சதீஷ் ராஜன் உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதில் இருசக்கர வாகனம், மினி டெம்போவில் மோதியதில் இளைஞர்கள் தூக்கி வீசப்படும் காட்சி நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.இதையும் படிங்க: நூதன முறையில் காரைத் திருடிய மூவர் கைது - காட்டிக்கொடுத்த சிசிடிவி