தமிழ்நாட்டில் கரோனா காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்க, தமிழ்நாடு அரசு சார்பில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பால்குளம் பகுதியில் உள்ள அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சிம் கார்டு வழங்கும் நிகழ்வு நேற்று (பிப்.25) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், மாணவ மாணவிகளுக்கு சிம் கார்டுகளை வழங்கினார். இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா சிம் கார்டுகள்: மாவட்ட ஆட்சியர் தகவல் !