ETV Bharat / state

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர்! - kanniyakumari handicapped women affected her husband

கன்னியாகுமரி: மேக்காமண்டபம் பகுதியில் திருமணமான வேறொரு பெண்ணுடன் சென்ற கணவரை மீட்டுத்தருமாறு அவரின் மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர் மல்க பேசி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

kanniyakumari handicapped women request to find out her husband video goes viral
author img

By

Published : Nov 25, 2019, 1:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த அஜித், மாற்றுத்திறளாளியான அஜிதா என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது. அஜித் கடந்த ஆறு மாதங்களாக திருவிதாங்கோடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றி்ல் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார்.

பேக்கரியில் வேலை செய்த போது, அங்கு பணிபுரிந்த ஷீபா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த மாதம் 22ஆம் தேதி தலைமறைவாகியுள்ளனர். பின்னர், ஷீபாவின் உறவினர் ஒருவர் கோவை காந்திநகர் பகுதியில் வைத்து அஜித் மற்றும் ஷீபாவை கண்டுபிடித்துள்ளார்.

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர்

இதன்பின்னர் ஷீபா மட்டும் ஊர் திரும்பியநிலையி்ல், அஜித் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இதற்கிடையில் , தன்னுடைய கணவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை எனவும் தன்னுடைய கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியவில்லை என்றும் அழுதபடி அஜிதா பேசி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது கணவனை கண்டுபிடித்து தர வேண்டுமென பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Body:கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்தவர்கள் அஜித்-அஜிதா தம்பதியினர். இதில், மாற்றுத்திறனாளியான அஜிதாவை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
ஆட்டோ ஓட்டுநரான அஜித்துக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த ஆறு மாதங்களாக திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஓரு பேக்கரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பேக்கரியில் வேலை செய்து வந்த ஷீபா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த மாதம் 22-ஆம் தேதி மாயமாகி உள்ளனர். பின்னர், ஷீபாவின் கணவரின் மைத்துனர் கோயம்புத்தூர் காந்திநகர் பகுதியில் வைத்து அஜித் மற்றும் தீபா ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஷீபா மட்டும் ஊர் திரும்பிய நிலையில் அஜித் இதுவரை திரும்பி வரவில்லை.
இதற்கிடையில் அஜிதா, தன்னுடைய கணவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை எனவும் தன்னுடைய கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என்றும், கணவரை திருவட்டார் காவல்துறையினர் மீட்டுத்தர வேண்டுமெனவும் அழுதபடி பேசி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.