கன்னியாகுமரி: திருவட்டார் அருகே பூவங்கோடு பகுதியில் உள்ள ஆசீர்வாதம் நகைக்கடையில் 54 பவுன் தங்கநகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தடையங்களை மறைக்க மிளகாய் தூள் தூவி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவட்டார் அருகே பூவங்கோடு பகுதியில் பரமசிவன் என்பவர் நடத்தி வரும் ஆசீர்வாதம் என்ற நகைக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த 54 பவுன் தங்கநகை மற்றும் மூன்று கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், கொள்ளையடித்த தடயங்களை மறைக்க கொள்ளையர்கள் அங்கு மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். இந்த நகைக் கடையில் கண்காணிப்பு கேமரா இல்லாத காரணத்தால் நகைக்கடை அருகிலுள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு