ETV Bharat / state

சட்டத்திற்குப் புறம்பாக வீடுகள் விற்பனை: ஆட்சியரிடம் மனு - சுப்ரமணியபுரம் காலனி

கன்னியாகுமரி: சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளை வாங்கியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

kanniyakumari collector office
kanniyakumari collector office
author img

By

Published : Feb 1, 2020, 11:51 AM IST

கன்னியாகுமரி: மயிலாடி அருகே சுப்பிரமணியபுரம் காலனியில் ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை சட்டத்திற்குப் புறம்பாக விலைக்கு வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனத் தலைவர் ஜான் விக்டர்தாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம் காலனியில், ஆதி திராவிடர்களுக்கு 31 வீடுகள் வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடர்கள் மட்டுமே வசிக்கும் இக்காலனியில், மயிலாடி பகுதியைச் சேர்ந்த ஜெயா, அவரது கணவர் பூபதி ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக, இரு வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய இரு வீடுகளையும் ஆதிதிராவிடர் அல்லாத மாற்று சமூகத்தினருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.

காலனி பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயிலிருந்து யாரையும் தண்ணீர் எடுக்க அனுமதிக்காததோடு, தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து கொடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

kanniyakumari collector office

இது குறித்து கேட்கும் நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துவருகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் கணவன்-மனைவியின் இந்தச் செயலால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க :கரூரில் பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை

Intro:குமரிமாவட்டம் மயிலாடி அருகே சுப்ரமணியபுரம் காலனியில் ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை சட்டத்திற்குப் புறம்பாக விலைக்கு வாங்கி காலனி மக்களுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.Body:tn_knk_03_collector_office_petition_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குமரிமாவட்டம் மயிலாடி அருகே சுப்ரமணியபுரம் காலனியில் ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை சட்டத்திற்குப் புறம்பாக விலைக்கு வாங்கி காலனி மக்களுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனத் தலைவர் ஜான் விக்டர்தாஸ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுப்பிரமணியபுரம் காலனி உள்ளது. இந்த காலனியில் 31 வீடுகள் அரசால் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் முழுவதும் தலித்துகள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மயிலாடி பகுதியை சேர்ந்த ஜெயா மற்றும் அவரது மனைவி பூபதி ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக ஆதிதிராவிடர் காலனியில் இருந்து இரு வீடுகளை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் இந்த வீடுகளை ஆதிதிராவிடர் அல்லாத மாற்று சமூகத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதனால் காலனியில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.மேலும் ஜெயா மற்றும் பூபதி ஆகியோர் தேவையில்லாமல் அடிக்கடி காலனிக்குள்ளாக வருகின்றனர். மேலும், அவர்கள் வீட்டு அருகில் இருக்கும் குடிநீர் குழாயிலிருந்து யாரையும் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் வீட்டு முன்பாக யார் வந்தாலும் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.இது குறித்து யாராவது கேட்டால் அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கூறி வழக்கு தொடுத்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்னை ஒன்றும் செய்ய முடியாது என காலனி மக்களை மிரட்டி வருகிறார். இதனால் காலனியில் உள்ள மக்கள் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே சட்டத்திற்கு புறம்பாக அரசு விதிகளுக்கு மீறி ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை விலைக்கு வாங்கி அப்பகுதி மக்கள் நிம்மதியாக வசிக்க தொடர்ந்து இடையூறு செய்து வரும் ஜெயா, பூபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.