கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே வடசேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் சத்தியசோபன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த இவருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முளகுமூடு பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி (31) ஜெனிட்டன் (31 ) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், இருவரையும் சோதனை செய்தனர். அப்போது, விற்பனைக்காக இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.