கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தோவாளை உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் குளம், ஏரி, ஆறு, அணை போன்றவற்றில் மீன்பிடிக்கும் உரிமையைப் பறிப்பதைக் கைவிட வேண்டும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குளங்களில் மீன் வளர்த்து அதனை திருடு போகாமல் பிடித்து விற்பனை செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க : வடலூர் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; நாளை ஜோதி தரிசனம்