ETV Bharat / state

ஆயுர்வேத மருந்து நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

author img

By

Published : Feb 14, 2023, 9:42 PM IST

நாகர்கோவிலில் தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனம், மருந்தகம், மருத்துவமனையின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் மாவட்டத்தின் பல இடங்களிலும் குமாரகோவில் முருகன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Income Tax department raided in Ayurvedic drug companies
ஆயுர்வேத மருந்து நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சிக்மா ஹெர்பல் ரெமடீஸ்( இந்தியா) என்ற தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனம் மற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவமனை மற்றும் மருந்தகம் என 5 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் சிதறாலைச் சேர்ந்த குமாரகோவில் முருகன் நிறுவனத்திற்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், பிரபலமான சிக்மா ஹெர்பல் ரெமடீஸ்( இந்தியா) என்ற தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான, மருந்தகங்கள், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகள், மற்றும் கோபாலன் ஆசான் ஆயுர்வேதா மருந்தகம் என நாகர்கோவில், விசுவாசபுரம் உட்பட ஐந்து இடங்களில் உதவி ஆணையாளர் அருள்பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல சிதறால் பகுதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன். இவர் குமாரகோவில் முருகன் என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மற்றும் குமரி மாவட்டம், திருவட்டார் அருகே செங்கல் சூளைகள் மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் பிரபல திருமணமண்டபம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

கேரளா மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு இவரது கல் குவாரியிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் குமாரகோவில் முருகன் நிறுவனத்தின் அதிபர் ராஜேந்திரனுக்கு சொந்தமான வீடுகள், கல் குவாரிகள், செங்கல்சூளைகள் மற்றும் திருமண மண்டபங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் திடீர் திரும்பமாக ஆற்றூரிலுள்ள ராஜேந்திரனின் ஆடிட்டரான பிரகாஷ் என்பவரசு அலுவலகத்திலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலர்கள் கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் இந்த திடீர் சோதனையால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: Income Tax Raid: வேலூரில் அம்பாலால் குழுமத்தில் வருமான வரித்துறை ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.