ETV Bharat / state

இரண்டாது கணவருடன் சேர்ந்து 7 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய தாய்! - காவல் துறையினர் விசாரணை

கன்னியாகுமரி : தன் இரண்டாவது கணவருடன் சேர்ந்து தனது ஏழு வயது சிறுவனைக் கொடுமைப்படுத்திய தாயிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாது கணவருடன் சேர்ந்து 7 வயது சிறுவனை சித்தரவதைப்படுத்திய தாய்!

author img

By

Published : Oct 19, 2020, 2:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 34). குறும்பனை பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டரை பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், அலெக்சாண்டர் ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, தனது மூத்த பெண்ணையும், ஒரு ஆண் குழந்தையையும் தனது தங்கை பாதுகாப்பில் வளர்க்க விட்டுள்ளார் சசிகலா.

தொடர்ந்து, மூன்றாவதாகப் பிறந்த தனது ஏழு வயது மகனுடன் வசித்து வந்த சசிகலா, தக்கலை பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 39) என்பவரை திருமணம் செய்துகொண்டு கடந்த 10 மாதங்களாக காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே சசிகலா, முருகன் இருவரும் சேர்ந்து அவர்களது ஏழு வயது சிறுவனை சித்திரவதைப்படுத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் நேற்று (அக். 18) மாலை, வீட்டிலிருந்த சிறுவனைப் பிடித்து அவனது முதுகு, கை, காலின் தொடைப் பகுதிகளில் ஆழமாக கடித்து முருகன் துன்புறுத்தி உள்ளார். இதனால் சிறுவன் வலியால் துடித்த அலறிய நிலையில், சிறுவனின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். இதனையடுத்து இது குறித்து நித்திரவிளை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாது கணவருடன் சேர்ந்து 7 வயது சிறுவனை சித்தரவதைப்படுத்திய தாய்!

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயம்பட்ட சிறுவனை மீட்டு சிறுவனின் உறவினர்களை வரவழைத்து முதலுதவி அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு நல மைய அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...கொலை மிரட்டல் விடுக்கும் அமைச்சர்- கட்சிக் கூட்டத்தில் போட்டுடைத்த எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.