ETV Bharat / state

எம்ஜிஆரின் வாரிசு நான்- கமல் ஹாசன் - makkal needhi maiam

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு அளிக்கும் சலுகைகளை பெண் விவசாயிகளுக்கும் அளிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

I am the heir of MGR says Kamal Hassan
எம்ஜிஆரின் வாரிசு நான்- கமல் ஹாசன்
author img

By

Published : Dec 16, 2020, 10:57 PM IST

Updated : Dec 17, 2020, 6:10 AM IST

கன்னியாகுமரி: சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தேர்தலுக்காக நாகர்கோவில் வரவில்லை. சிறு வயதிலே நாகர்கோவில் வந்துள்ளேன்.

எம்ஜிஆர் இருக்கும்போது நான் வர வேண்டிய தேவை இல்லை. இப்போது தேவை வந்துள்ளது. அவர் கொண்டு வந்த இரட்டை இலையை, தற்போது விருந்து சாப்பிடும் இலை என நினைத்திருக்கிறார்கள். இதுவரை எம்ஜிஆரை பேசாத இவர் தற்போது பேசுகிறார் என சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்தான் என்னை கையில் எடுத்தவர். மக்களிடம் இருந்து வெகுதூரம் சென்றுவிட்ட இவர்களுக்கு மக்களையும் தெரியாது மக்கள் திலகத்தையும் தெரியாது.

நான் எம்ஜிஆரின் நீட்சி என எங்கும் பேசுவேன்; எப்போதும் தைரியமாக பேசுவேன். நாங்கள் நேர்மையாக இருக்க முடிவு செய்துவிட்டோம். என் அளவிற்கு நல்ல நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் தொழுவது காசு. நாங்கள் தொழுவது மக்களை. நீங்கள் முழு நேர அரசியல்வாதியா என கேள்வி கேட்கிறார்கள். யாரும் எதையும் முழு நேரமும் ஒரு விஷயத்தை செய்ய முடியாது.

வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் நபர்களை சோம்பேறி என்றே சொல்ல வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். கடமை செய்ய வந்தவன் நான். காசுக்காக வரவில்லை. ஆட்சி கட்டில் என்ன அவலட்சணத்தில் இருக்கிறது என்பதை நினைத்தால் எனக்கு வயிறு கலக்குகிறது. சென்டரிசம் என்னவோ வெளிநாட்டில் இருந்து காப்பி அடிப்பதாக கூறுகிறார்கள். அப்போ கம்யூனிசம் எங்கிருந்து வந்தது.

எம்ஜிஆரின் வாரிசு நான்- கமல் ஹாசன்

மநீம ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

பாரதியின் கவிதைகள் ரஷிய மொழியில் மொழிபெரியர்ப்பு செய்யவில்லையா? பைபிள் , குரான் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. நடுநிலை என்பதை காப்பி அடிக்கவில்லை அது என் முப்பாட்டன் வள்ளுவன் வழி அதுவே என் வழி. ஒரு விவசாயிக்கு அரசு அளிக்கும் சலுகைகளை, பெண் விவசாயிகளுக்கும் கொடுக்கும் இந்த மக்கள் நீதி மய்யம் அரசு. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டம் எங்கள் தேர்தல் வாக்குறுதியில் உள்ளது. இதை கண்டிப்பாக செயல்படுத்த முடியும். அரசிடம் அத்தனைக்கும் பணம் உள்ளது. கொள்ளை அடிக்காமல் இருந்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். தண்ணீரை காசிற்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை.

ஏழ்மை நிலையை ஒழித்தால் தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுக்கும் காசை மக்கள் பெற மாட்டார்கள் என்பதால் ஏழ்மை நிலையை ஒழிக்கமாட்டார்கள். ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க எம்ஜிஆர் நினைத்தார். எம்ஜிஆரின் நீட்சியாக அதை நான் செய்து முடித்தால் எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். குற்ற உணர்வுடன் தற்போது தேர்தலுக்கு வந்துள்ளேன். முன்பே தப்பை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும் தவறு செய்துவிட்டேன்" என்றார்.

இதையும் படிங்க: 'எம்ஜிஆரை கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதம்'- அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Dec 17, 2020, 6:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.