ETV Bharat / state

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் - கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி - கன்னியாகுமரியில் படுகொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுக்கு பயந்து கணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

Husband
Husband
author img

By

Published : Dec 16, 2022, 1:35 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த ஜெபபிரின்ஸா (32) என்பவரும், அழகிய மண்டபத்தை சேர்ந்த எபனேசர் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஜெபபிரின்ஸா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களாக, ஜெபபிரின்ஸா திருவனந்தபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு(டிச.15) மனைவியை பார்க்கச் சென்ற எபனேசர், அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்திய எபனேசர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ஜெபபரின்ஸா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக எபனேசர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கைதுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற எபனேசர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன்‌ ரம்மியால் மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.