கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ”அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டில் ஆளுநர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. திமுக கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக உள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆளுநர்களும் பாஜாவின் சேவகர்களாகவே உள்ளனர். இவர்களிடம் இருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்” என்றார்.
ரஜினி, கமல் அரசியல் பற்றி எழுப்பியக் கேள்விக்கு, கருத்து கூற விரும்பவில்லை என்று பதிலளித்தார். பிகார் தேர்தலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
இதையும் படிங்க:மீண்டும் திமுக தலைவர் குறித்து கேலி சுவரொட்டிகள்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்