பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தார்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா அமையவுள்ளது. அதில் வேறு எந்த மாநிலத்திலுமில்லாத அளவில் கால்நடை அபிவிருத்தி, கால்நடை மருத்துவப் படிப்பு, கால்நடை ஆராய்ச்சி படிப்பு, கால்நடை பூங்கா உள்ளிட்டவைகள் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அமைக்கப்படவுள்ளது.
போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. பத்திரிகை நடத்துபவர்கள் அவர்களின் நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் பற்றிய முழு விவரத்தை அரசுக்கு அளித்தால் உடனடியாக போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு - அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்