கன்னியாகுமரி மாவட்டம் குமரி - கேரள எல்லை பகுதியில் உள்ள படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்றிரவு காவல் பணியில் இருந்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வில்சன்( 58 ), மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட வில்சனின் உடல் மார்த்தாண்டம், வில்லியம் மருத்துவமனை அருகிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்து வரப்பட்டு மார்த்தாண்டம் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் உள்ள சிற்றாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்
இதில் தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உள்பட ஏராளமான காவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மார்த்தாண்டம் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.