ETV Bharat / state

அரசின் செயலைக் கண்டித்து அலுவலர்கள் உள்ளிருப்பு போரட்டம் - ஜாக்டோ ஜியோ

கன்னியாகுமரி: தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவரை பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
author img

By

Published : Jul 24, 2019, 4:22 PM IST

தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். அவர் அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக அதன் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை முன் நின்று நடத்திவந்தார்.

இதனையடுத்து அவர் கடந்த மே மாதத்துடன் பணி நிறைவு பெறுவதாக இருந்த சூழலில் அவர் ஓய்வு பெறும் நாளான மே 31ஆம் தேதி தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை அவரை பழிவாங்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்டது என சக அலுவலர்கள் கூறுகின்றனர்.

போரட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

அரசின் இச்செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் அவரது தற்காலிக பணி நீக்கத்தை ரத்துசெய்து அவருக்கு ஓய்வுக்கான அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் என்று போராடிவருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணி ஏதும் செய்யாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் இந்த அலுவலகத்தில் பணி ஏதும் நடைபெறாமல் அனைத்து பணிகளும் முடங்கின. இதனால் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று திருமண நிதி உதவித் தொகை, பசுமை வீடு திட்டம் போன்ற மக்கள் சார்ந்த திட்டங்களுக்காக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் திரும்ப சென்றனர்.

Intro:தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவரை பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய்த தமிழக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே அங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவரை பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய்த தமிழக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே அங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். அரசு ஊழியர்களின் சலுகைக்காக அதன் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் முன் நின்று போராடி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்துடன் பணி நிறைவு பெறுவதாக இருந்த நிலையில் தான் ஓய்வு பெறும் நாளான மே 31-ஆம் தேதி பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகஅரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. இதனை கண்டித்து அவரது தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய கோரியும் அவருக்கு ஓய்வுக்கான அனைத்து பண பலன்களையும் வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கங்கள் அரசை கண்டித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளே அங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஊரக வளர்ச்சி துறை பணியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆசீர் மாலின் தலைமையில் தங்கள் அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அரசு பணிகளை செய்யாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .இச்சம்பவத்தால் இந்த அலுவலகத்தில் பணி ஏதும் நடைபெறாமல் அனைத்து பணிகளும் முடங்கின. இதனால் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று திருமண நிதி உதவித் தொகை பசுமை வீடு திட்டம் போன்ற மக்கள் சார்ந்த திட்டங்களுக்காக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் திரும்ப சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.