குமரி மாவட்டம், நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் பகுதியில் டேவிட் என்பவர் முதுகு, தண்டுவட சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இம்மருத்துவமனையில் சுமார் 25 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் அத்துமீறி புகுந்து சூறையாடியுள்ளனர்.
அங்கிருந்த நோயாளிகளை மிரட்டிய இக்கும்பல், அம்மருத்துவமனை பணியாளர்களது செல்போன்களையும் பறித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்த உபகரணங்கள், ஜன்னல், மேசை உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த சிசிடிவி பதிவுப் பெட்டியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து 62,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் இவர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அச்சத்தில் உறைந்த மருத்துவர் டேவிட், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் காவல் துறையினர், மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்து வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இ்தையும் படிங்க : தமிழ்நாட்டில் வேலும் 5,516 பேருக்கு கரோனா உறுதி; 60 பேர் உயிரிழப்பு!