ETV Bharat / state

சரக்கு ரயில் சேவை ஏப் 25ஆம் தேதிவரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு

கன்னியாகுமரி: திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் பார்சல் சேவைக்காக இயக்கப்பட்டு வந்த சரக்கு ரயில் சேவையை வருகின்ற 25ஆம் தேதிவரை நீடித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

kanniyakumari
kanniyakumari
author img

By

Published : Apr 14, 2020, 3:22 PM IST

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் கொண்டு செல்லும் வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

அதன்படி ஏற்கனவே நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே வண்டி எண்- 00658 மற்றும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வண்டி எண்- 00657 இயக்கப்பட்டுவருகிறது. இந்த ரயில்கள் இன்றுவரை (14ஆம் தேதி) மட்டும் பார்சல் சர்வீஸ் சேவைக்காக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பார்சல் சர்வீஸ் ரயில் சேவை வருகின்ற 25ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ரயில்வே நிலையம்

இதேபோன்று, திருவனந்தபுரம்-கோழிக்கோடு, கோழிக்கோடு- திருவனந்தபுரம் இடையே இயங்கும் பார்சல் ரயில் சேவையும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ஒரு மருத்துவர், இரு செவிலியருக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.