ETV Bharat / state

“சாகர்மாலா திட்டம் மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம்” - தமிழ்ப் பேரரசு கட்சி

கன்னியாகுமரி: சாகர்மாலா திட்டம் என்பது மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம், என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் கூறியுள்ளார்.

கவுதமன்
author img

By

Published : Aug 5, 2019, 6:38 AM IST

மண்ணுரிமை காப்போம் என்ற பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சுவாமிதோப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்த மசோதாக்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழ்நாடு அரசால் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

சாதி வன்மத்தை ஒழித்த அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத் தலங்களை இந்து அறநிலையத் துறை அபகரிக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. தமிழ் புலவர் என்ற ஒரே காரணத்தால் மத்திய மாநில அரசுகள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை நிறுத்துகிறது. நான்கு வழிச்சாலை என்ற பெயரில் குளங்கள், மரங்கள் அழிக்கப்பட்டு ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து வருகின்றனர்.

கவுதமன் செய்தியாளர் சந்திப்பு

முத்தலாக் மசோதாவில் எங்களுக்கு ஈடுபாடில்லை. இம்மசோதா சிறுபான்மையினரை ஒடுக்குவதாகவே உள்ளது. மீனவர்களை கொன்று மாலையிடும் திட்டமே சாகர்மாலா திட்டம். இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என கூறினார்.

Intro:மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாக்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன.நீட் எமனால் பல பெண்கள் பலியாகி வருகின்றனர்.தமிழக அரசால் இரண்டு முறை நீட் டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதை டெல்லிக்கு அனுப்பினார்களா? இல்லையா?டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியவில்லை என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.Body:tn_knk_03_directorgovthaman_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாக்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன.நீட் எமனால் பல பெண்கள் பலியாகி வருகின்றனர்.தமிழக அரசால் இரண்டு முறை நீட் டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதை டெல்லிக்கு அனுப்பினார்களா? இல்லையா?டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியவில்லை என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மண்ணுரிமை காப்போம் என்ற பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சுவாமிதோப்பில் இன்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதமன்மேலும் கூறுகையில் "மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாக்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன.நீட் எமனால் பல பெண்கள் பலியாகி வருகின்றனர்.தமிழக அரசால் இரண்டு முறை நீட் டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதை டெல்லிக்கு அனுப்பினார்களா? இல்லையா?டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது தெரியவில்லை. சாதி வன்மத்தை ஒழித்த அய்யா வைகுண்டரின் வழிபாட்டு தலங்களை இந்து அறநிலைய துறை அபகரிக்க முயலுகிறது. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது .தமிழ் புலவர் என்ற ஒரே காரணத்தால் மத்திய மாநில அரசுகள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை ஒடுக்குகிறது. நான்கு வழிச்சாலை என்ற பெயரில் குளங்கள், மரங்கள் அழிக்கப்பட்டு ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் கூட்டு போட்டு கொள்ளை அடித்து வருகின்றனர் என்று கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.