ETV Bharat / state

பூட்டிய கடையை திறந்து பழம் தர மறுத்த வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையை பூட்டிய பிறகு பழம் கேட்ட வாடிக்கையாளருக்கு பழம் தர மறுத்த வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூட்டிய கடையை திறந்து பழம் தர மறுத்த பழ வியாபாரிக்கு தீ வைப்பு

author img

By

Published : May 2, 2023, 7:58 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி அடுத்த தட்டான் விளையைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (30). இவர் ராமன்புதூர் பகுதியில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 30) வழக்கம் போல் கடையைத் திறந்து வியாபாரம் நடத்திய பிரேம் ஆனந்த், இரவு 11 மணியளவில் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் செல்வதற்குத் தயாரானார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள் பிரேம் ஆனந்திடம் பழம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு, ‘பழங்களைக் கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்போது எடுக்க முடியாது’ என பிரேம் ஆனந்த் கூறி உள்ளார். அதற்கு, ‘எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்து விட்டு, எங்களுக்குப் பழம் தர மாட்டாயா’ எனக் கூறியவாறே ஆனந்திடம் அந்த வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகள் பேசிய வாலிபர்கள், பிரேம் ஆனந்தை கல்லால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து, தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இதனையடுத்து தீக்காயங்களால் அவதிப்பட்ட பிரேம் ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்துள்ளனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடி உள்ளனர்.

மேலும், இது குறித்து நேசமணி நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், பிரேம் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அதேநேரம், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், அதன் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர்கள் புன்னை நகரைச் சேர்ந்த நவீன்குமார் மற்றும் தட்டான் விளையைச் சேர்ந்த சஞ்சய் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, தனிப்படை அமைத்துக் காவல் துறையினர், தலைமறைவாகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொதிக்கும் ரசப்பாத்திரத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.