ETV Bharat / state

தனிநபர் கடன்களில் ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு - கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரியில் 199 கூட்டுறவு சங்கங்களில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தனிநபர் கடன்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகவுகம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 6:55 PM IST

தனிநபர் கடன்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 199 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பயிர் கடன், விவசாய கடன், மகளிர் கடன், சுய உதவி குழு கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. 199 கூட்டுறவு சங்கங்களில் குறிப்பாக தேரூர் கூட்டுறவு சங்கம் எண் ஒய் 334இல் கடந்த 2015ஆம் ஆண்டு PLF லோன் எனும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் தேரேகால்புதூர் என்ற பெயரில் மகளிர் குழுவிற்கு ஒரு கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. அப்படி மொத்தமாக 45 குழுக்களில் 740 பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கடனுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரைவில் 36 மாத தவணையாக செலுத்த வேண்டும். இந்த கடன் பெற்றவர்களின் அடையாளம் சார்ந்த எந்தவித ஆவணங்களும் முறையாக மேற்படி சங்க கோப்புகளில் இடம்பெறவில்லை.

இதனை போன்று மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என் Y48இல் 2013 முதல் 2018 வரையிலான வருடத்தில் அப்போதைய சங்க தலைவராக இருந்த திமுகாவைச் சேர்ந்த சாய்ராம் இருந்தபோது 1 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 49 ரூபாய் முறையான ஆவணங்களின்றி முறைகேடு நடந்துள்ளதை தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிந்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. இதுபோல் பல கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி 2022ஆம் ஆண்டு செப்.14 ஆம் ஆண்டு அன்று கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இதனை பார்க்கும்போது ரூ.150 கோடிக்கு மேல் முறையீடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் அரசு பணம் பல கோடிகளுக்கு கையாடல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாக இருந்த சங்கங்களின் அப்போதைய தலைவர்கள் சங்கங்களின் செயலாளர் ஒன்று சேர்ந்து இந்த கையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளான கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும் தொடர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக இதன் மூலம் தெரியவருகிறது. எனவே கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் சங்கங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களை முறையான விசாரணை கமிஷன் அமைத்து முறைகேடு செய்த கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல இதனை அறிந்தும், கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோசடியில் ஈடுபட்ட தலைவர்கள் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜான் விக்டர் தாஸ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திருட சென்ற இடத்தில் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு தூங்கிய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.