கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் பிறந்த முகமது இஸ்மாயில், சட்டம் பயின்றவர். அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த இவர், சுதந்திர இந்தியாவில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக தேர்வானார்.
பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வானவர். அரசியல் பணி மட்டுமல்லாமல், சட்டப்பணி, பல்வேறு சமூகப் பணிகளும் இவர் ஆற்றியுள்ளார்.
நேர்மையான மூத்த அரசியல்வாதி என பெயர் பெற்ற இவர் தற்போது மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார். இவர் சமீப காலமாக வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.