இதுதொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
“குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த விஜி செல்லப்பா என்பவர் கிட்டத்தட்ட 45 பேரிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர். இதுதொடர்பாக எஸ்பி அலுவலகத்தில் கடந்தாண்டு புகார் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாங்கள் மீண்டும் தற்போது புகாரளித்துள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேண்டிய நிலைதான் உள்ளது. எஸ்பி அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தும் எந்த பயனுமில்லை. காவல் நிலையத்தில் சென்று கேட்டால் உங்களுக்கு தொலைபேசி அழைப்புவரும் என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். நாங்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.