ETV Bharat / state

ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600 - அதிர்ச்சியில் மக்கள்! - விலை உயர்வு

கன்னியாகுமரி: பூக்களின் தேவை அதிகம் இருந்தும், பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மல்லிகைப் பூ
author img

By

Published : May 20, 2019, 7:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மிகவும் பிரபலமானது மலர் சந்தை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அதிகமான மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்திருந்ததால் வியாபாரிகள் போட்டிபோட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

கன்னியாகுமரி மலர் சந்தை

ஆனால் தற்போது, கன்னியாகுமரியில் பூக்களின் தேவை அதிகம் இருந்தும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மல்லிகை பூ கிலோ ரூ.600க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.500க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பூக்களின் தேவை அதிகம் இருந்தும், வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Body:குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரபலமானது ஆகும். இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைவாக இருந்தது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். என்வேய் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் பூக்களின் தேவை அதிகம் இருந்தும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக குறைந்த அளவு பூக்களை மலர் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மல்லிகை பூ கிலோ ரூ 600 க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ 500-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ 400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.