ETV Bharat / state

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவளத்தில் மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - fishermen protest demanding various things

கன்னியாகுமரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவளத்தில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Fisherman protest
Fisherman protest
author img

By

Published : Oct 10, 2020, 2:48 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் மேற்குப் பகுதியில் தூண்டில் வளைவை மேலும் 150 அடி நீட்டித்தும், கிழக்குப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து விபத்துகளையும் மீன்பிடி கலன்களின சேதத்தைத் தடுக்கவேண்டும், மீனவர் நலவாரியத்தில் மகளிருக்கு 58 வயதிலும் ஆண்களுக்கு 60 வயதிலும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

இதர நல வாரியங்களில் வழங்குவது போல நிதி சலுகைகளை இரட்டிப்பாக வழங்கவேண்டும், கடற்கரை கிராமங்களான நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் சாலையைச் சீரமைக்கவேண்டும்,

மீன் துறையினரால் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து வள்ளங்களுக்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலயம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்பிடித்தொழிற் சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அந்தோணி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மீன் தொழிலாளர், சங்க நிர்வாகி தனீஸ் மற்றும் ஏராளமான மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஊரகச்சாலை மேம்பாட்டு டெண்டர்கள் அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.