ETV Bharat / state

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - மீட்காத அரசுகளை கண்டித்து போராட்டம்

கன்னியாகுமரி: ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இதுவரை மீட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்
author img

By

Published : Mar 11, 2020, 4:58 PM IST

Updated : Mar 11, 2020, 7:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். தற்போது அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்குள்ள மீனவர்கள் சொந்த நாட்டிற்கு வர முடியாமல் சிக்கலில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு, மருத்துவ பொருள்கள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மீட்கக் கோரி பெற்றோர்கள், உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தனர். எனினும் மீனவர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டு அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

உண்ணாவிரதப் போராட்டம்

இதையும் படிங்க: ஈரானில் சிக்கித் தவிக்கும் கணவர் - கைக்குழந்தையுடன் மனு அளித்த பெண்!

Last Updated : Mar 11, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.