ETV Bharat / state

பருவ நெல் அறுவடை தொடங்கியும் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகள் முடியாததால் விவசாயிகள் வேதனை - stalled purchase station construction work

கன்னியாகுமரியில் முதல் பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியும் அங்கு கட்டப்பட்டவரும் நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டுமான பணிகள் முடியாததால் தனியார் கட்டடங்களில் நெல் மூட்டைகளை வைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

குமரியில் முதல் பருவ நெல் அறுவடை தொடக்கம்.. கொள்முதல் நிலைய கட்டுமான பணி முடங்கியதால் விவசாயிகள் வேதனை
author img

By

Published : Aug 29, 2022, 7:34 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. முதல் பருவ நெல் சாகுபடி ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் அறுவடை பணிகள் நடைபெறும். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அரசு தரப்பில் நெல் கொள்முதல் நிலையங்களின் கட்டடங்கள் கூரை இல்லாமல் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனையும் நிலையில் உள்ளது. இந்த நேரத்திலேயே நாகர்கோவில் அருகே பறக்கை என்ற இடத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர விவசாயிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.

புதிதாக கட்டப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம்

அதன் அடிப்படையில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தின் கட்டமானப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடை செய்த நெல்களை அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்க முடியாமல், தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் அங்கு நெல் மூட்டைகளை வைத்து வருகின்றனர்.

பறக்கை விவசாயி பேட்டி

அதோடு தனியாரிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலையும ஏற்பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பறக்கை பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழையால் வயலில் சாய்ந்த நெல்மணிகள்.. விவசாயிகள் கவலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.