ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையில் தீ விபத்து! - Fire in the Western Continuum Mountains

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி தெற்கு மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், தீயை அணைக்க வனத்துறையினர், தீயணைப்பு துறையினருடன் இணைந்து போராடி வருகின்றனர்.

Forest fire  ஆரல்வாய்மொழி தெற்கு மலைப்பகுதியில் தீ விபத்து  கன்னியாகுமரி மலைப்பகுதியில் தீ விபத்து  கன்னியாகுமரி தீ விபத்து  Kanniyakumari Fire Accident  Aralvaymozhi fire in the southern hills  Fire in Kanyakumari hills  மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து  Fire in the Western Continuum Mountains  Kanniyakumari Hills Fire
Fire in Kanyakumari hills
author img

By

Published : Feb 4, 2021, 11:02 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலை உயர்ந்த சந்தனம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட காட்டு மரங்களும், மிளா, கரடி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று (பிப். 03) ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. சிறிய அளவில் ஏற்பட்ட இந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர். இந்நிலையில், இன்று(பிப்.4) இரவு திடீரென காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு, வனத்துறையினர் தீயை அணைப்பதற்கு மலைப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இரவு நேரம் என்பதால் தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டுத் தீ: அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.