ETV Bharat / state

’பகவதி அம்மன் கோயில் தீ விபத்துக்கு அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம்’ - எல்.முருகன் - kanniyakumari news

கன்னியாகுமரி: மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் கேரள நம்பூதரிகளை வைத்து பரிகார பூஜை மேற்கொள்ள வேண்டுமெனவும், தங்கமேற்கூரை அமைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
author img

By

Published : Jun 3, 2021, 7:05 PM IST

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆலயத்தின் அம்மன் சன்னதி கருவறையின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக, மண்டைகாடு பகவதி அம்மனை தரிசித்த அவர், காவல்துறை அலுவலர்களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.

பகவதி அம்மன் கோயில் முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது ’’குமரியில் பிரசித்தபெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு அறநிலைத்துறை அலுவலர்களின் அலட்சியமே காரணம்.
தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அதற்கு காரணமான அலுவலர்கள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும். அதுமட்டுமல்லாமல், சேதமடைந்த அம்மன் சன்னதி மேற்கூரையை அகற்றி, சபரிமலை ஆலயத்தைப் போன்று கேரளா முறைபடி தங்கதால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இந்த கோயிலின் ஆகமவிதிகளின்படி கேரளா நம்பூதிரிகளை வைத்து தேவ பிரசன்னம் வைத்து பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்யவேண்டும். இந்த விபத்து குறித்து காவல் துறை, மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை முடிவுகளை மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்’’ என்று கூறினார்.

இதையும் படிங்க: 'இந்த மாசத்துக்கு இது போதும்' -ரேசனில் 14 பொருள்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.