கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அடுத்த அறுகுவிளையைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (41). இவரது மனைவி கவிதா (39). இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, திடீரென சமையல் அறையில் தீ பிடித்துள்ளது.
இதில் வீட்டிலிருந்த கவிதா, சாமிக்கண்ணு, அவர்களது இரு மகள்கள் ஆகியோரது உடலில் தீ பிடித்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கவிதா ஏற்கனவே சமையல் செய்த பின் சிலிண்டரை சரியாக மூடவில்லை எனத் தெரிகிறது. இதனால், எரிவாயு கசிந்து சமயலறை முழுவதும் எரிவாயு பரவியிருந்ததால் மீண்டும் கவிதா அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!