கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் பருவ நெல்சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய மழையில்லாததால், உரிய நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. எனினும், விவசாயிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக ஜூன் 20ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தண்ணீர் திறந்து ஒருமாதமாகியும், கால்வாய்கள் தூர்வாரப்படாததால், கடைமடைப் பகுதியான சுசீந்திரம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் சுசீந்திரம் பகுதியில் பயிரிட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகுவதாக கூறிய விவசாயிகள், கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.