கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் ஊராட்சியில் 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை ஊராட்சித் தலைவராக இருந்தவர் திமுகவை சேர்ந்த சிசியோயன். இவர் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட ஊராட்சி பணத்தில் 61 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று(செப்.30) நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் யாசின் முபாரக் அலி ஆஜரானார், நீதிபதி கிறிஸ்டியன் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி ஊராட்சி பணத்தை கையாடல் செய்த சிசியோயனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாப்பிங் மாலுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல்