கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம்
மேலும், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்தவும், வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள்
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு விகாஸ் சிங்,
- கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சந்தீப் குமார்,
- பத்மநாபபுரம், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மகேஷ் குமார்,
- விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கல்பேஷ் கே. ரூபாவதியா ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.