கன்னியாகுமரி மாவட்டம் இரணியலையடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் துளசி. இவருக்கு 2002ஆம் ஆண்டு நாகர்கோவிலை அடுத்த சூரங்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வந்த முருகேசன், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் துளசியிடம் வரதட்சணை கேட்டும் முருகேசன் கொடுமைபடுத்தி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து தெருவோரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த துளசி, நேற்று (ஆகஸ்ட் 15) வீட்டிற்குள் அனுமதிக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லையெனவும், காவல் துறையினர் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் துளசி அழுது புலம்பினார்.
இதையும் படிங்க:காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது