ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கறுப்பு பட்டை அணிந்து அடையாள போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், "மத்திய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவமனைகளுக்கு நிலையான உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மருத்துவமனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களை தாக்குபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதை வலியுறுத்திபோராட்டம் நடைபெறுகிறது" என்றனர்.