இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு ஜமாத் கூட்டமைப்பின் சார்பிலும் முஸ்லிம் இயக்கங்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது கண்டனங்களை பதிவு செய்தார்,
அவர் தனது உரையில், " நாட்டில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி பின்னடைவு, போன்ற பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதன் பின்னணி காரணத்தை மோடி விளக்கவேண்டும். இலங்கையிலிருந்து அகதிகளாக ஏராளமானோர் இந்தியா வருகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்று பாஜக கூறுகிறது.
மொழி, இன வாரியாக பொதுமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சகோதர்களாக வாழ்ந்த சமூகத்தை இன்று பிரித்து பார்க்க ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அரசியல் சட்ட 14 ஆவது பிரிவின்படி இந்திய மண்ணில் வாழும் அனைவரும் இந்தியர்கள் தான் என்றும் அந்த சட்ட பிரிவை பாஜக அரசு நீக்க பார்க்கிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத ஒரே கட்சி உண்டு என்றால் அது இன்றைய பாஜக கட்சி தான் என்றார்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்பட்ட குழந்தைகள் காப்பகம்!