ETV Bharat / state

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளரைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! - protest for To repair the roads

கன்னியாகுமரி: ஆளுங்கட்சியினருக்கு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 30, 2019, 5:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதில் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் அந்த சாலைகளை சரி செய்யவும் நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சியினரின் கட்டடங்களை மட்டும் விட்டுவிட்டு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படியுங்க:

கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி திமுகவினர் போராட்டம்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் குண்டும் குழியுமான உள்ள சாலைகளை செப்பனிட கோரியும், மாநகராட்சி ஆணையாளரை கண்டித்தும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் குண்டும் குழியுமான உள்ள சாலைகளை செப்பனிட வேண்டியும், நில ஆக்கிரமிப்பு என்ற கட்டிங்களை இடித்து அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சியினரின் கட்டிடங்களை மட்டும் விட்டுவிட்டு ஒருதலைபட்டசமாக செயல்படுவதாக

கூறி மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். இதில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.