கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று(ஜன-26) குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தக்கலையில் இருந்து 20 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்தார். அவருடன் திமுக நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பின்தொடர்ந்த படி பேரணியாக வந்தனர்
இந்நிலையில், எம்எல்ஏ-உடன் வந்த திமுக நிர்வாகி ஒருவர், அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திடீரென மயங்கி விழுந்தார். அவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.