தகவல் தொழில்நுட்பம் ,டிஜிட்டல் விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து நடந்த வட்டமேசை மாநாட்டில் மத்திய, மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சர்வதேச விளையாட்டு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைப்பின் இந்திய செயலாளர் சண்முகநாதன் கூறுகையில்,
டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச அமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளனர். இதுவரை சாதாரணமாக இருந்த விளையாட்டுகள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் விளையாடப்பட்டு வருகிறது. எனவே தற்போது நமது நாட்டிற்கு டிஜிட்டல் விளையாட்டு பல்கலைக்கழகம் அல்லது மாநிலம் தோறும் தேசிய டிஜிட்டல் விளையாட்டு மையம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுக்கு நேரடியாக பரிந்துரை செய்ய உள்ளோம். நமது நாட்டில் பணபரிவர்த்தனை தொடங்கி அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.
மத்திய அரசின் டிஜிட்டல் நடவடிக்கைள் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டு துறையில் டிஜிட்டல் விளையாட்டு அதிகரித்துவருகிறது பாரம்பரியமாக உள்ள பி.இ மெக்கானிக்கல் போல் பிஇ விளையாட்டு மெக்கானிக்கல் என்று மாற்றம் செய்யப்பட்டு படிக்கும் காலம் வரும். அப்படி வரும்போது விளையாட்டின் மீது மோகம், வேலைவாய்ப்பு ஏற்படுவது உறுதி. அதேபோல் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு
வேலை கிடைக்கும் அளவுக்கு டிஜிட்டல் விளையாட்டு பாடத்திட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல இருக்கிறோம்"என்றார்.