பாஜக கட்சியின் மாவட்ட தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவராக இருந்த முத்துகிருஷ்ணன் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மாவட்ட தலைவராக இருந்ததால் அவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், பழனிவேல்சாமி, சுப.நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குமரி மாவட்ட பாஜக தலைவராக தர்மராஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஐந்து மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குமரி மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மராஜ் இதற்கு முன் கோட்டப் பொறுப்பாளராகவும், குமரி மாவட்ட தலைவராகவும் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட புதிய பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மராஜுக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மீனாதேவ், வேல்பாண்டியன் உட்பட பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மோடி வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்கள் செயல்பட்டால்.. பொன்.ராதாகிருஷ்ணனின் பொங்கல் வாழ்த்து!