கன்னியாகுமரி: புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துவருகின்றனர்
புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களில் மட்டுமின்றி வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுசீந்திரம் தாணுமாலிய சுவாமி கோயிலின் மூலவர், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் உள்ளிட்ட முக்கிய சன்னிதானங்களில் மக்கள் அலைபோல் குவித்துள்ளனர்.
இதையும் படிங்க:2023 புத்தாண்டு: பாணபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா!