ETV Bharat / state

அய்யா வைகுண்டரை தரிசித்தால் ஜெயமே: 'ஜெ' வழியில் ஓபிஎஸ்! - சாமிதோப்பு

அய்யா வைகுண்டசாமி அவதார நாளான மார்ச் 4ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சாமித்தோப்பிற்கு வர உள்ளதாக அதன் இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

deputy cm ops to visit samithopu
deputy cm ops to visit samithopu
author img

By

Published : Feb 23, 2021, 7:56 AM IST

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டசாமியின் 186ஆவது அவதார விழா மார்ச் 4ஆம் தேதி நடக்கிறது.

அய்யாவின் அவதார நாளை முன்னிட்டு நாகர்கோவிலிருந்து சாமித்தோப்பிற்கு ஊர்வலமாக வந்து, அய்யாவை பக்தர்கள் வழிபடுகின்றனர். 2010ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சாமித்தோப்பிற்கு வந்து அய்யாவை வழிபட்டுத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி மாபெரும் வெற்றிபெற்றார்.

அதன்பிறகு 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சி தொடர்ந்து நடக்கிறது. தற்போது வரவிருக்கும் பொதுத்தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி தொடரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் உறுதியுடன் நம்புகின்றனர்.

இச்சூழலில் அய்யா வைகுண்டரின் 186ஆவது அவதார நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சாமித்தோப்பு வருகைதந்து அய்யா வைகுண்ட சாமியைத் தரிசனம் செய்யவுள்ளார். இதனை சாமித்தோப்பு இயக்குநர் அன்பழகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.