தமிழ்நாடு துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் 69ஆவது பிறந்தநாள் (ஜனவரி 14) விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திhdபெற்ற நாகராஜா கோயிலில் குமரி மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குமரி மாவட்ட செயலாளரும் மாவட்ட பால்வளத் துறை தலைவருமான அசோகன் தலைமையில் நாகராஜா சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையவும் தமிழ்நாடு நலம்பெறவும் துணை முதலமைச்சர் உடல் ஆரோக்கியம் பெறவும் வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும், ஓ. பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெண்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து!