கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் அருகே கோலஞ்சி மடம் மலை கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடந்துதான் நகர் பகுதிக்குள் செல்கின்றனர். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் அவர்கள் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அங்கு அவர்கள் ஆற்றுப்பாலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று (டிச.8) அப்பகுதியில் வலிப்பு ஏற்பட்ட முண்டன் காணி ( 70 ) என்ற முதியவரை பழங்குடியின மக்கள் விரிப்பில் கட்டி கரடு முரடான வனப்பகுதியை கடந்து மருத்துவமனைக்கு சுமந்து சென்றனர். தற்போது முதியவர் குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: 60 ஏக்கர் ஏரி 20 ஏக்கர் கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்!