இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
![ஆணையர் ஆஷா அஜித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-knk-01-corporation-commissioner-order-image-7203868_02032021125211_0203f_1614669731_739.jpg)
cVIJIL செயலி:
மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல் சம்பந்தமான புகார்களைக் கைப்பேசியில் காணொலி அல்லது புகைப்படம் எடுத்து cVIJIL என்ற செயலி மூலம் அனுப்பலாம்.
புகார் பதிவுசெய்யப்பட்ட உடனே தங்களது புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரம் தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு ஆணையர் ஆஷா அஜித் தெரிவித்தார்.