கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்ததில் கரோனா வைரஸ் எதுவுமில்லை என உறுதியானதையடுத்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அபுதாபியிலிருந்து குமரி மாவட்டம் வந்த 26 வயது இளைஞர், கேரளா மாநிலத்திலிருந்து நாகர்கோவில் வந்த 60 வயது பெண் ஆகியோர் கரோனா அறிகுறி காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களது சளி, ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா என்ற விவரம் தெரியவரும். பின்னர் அவர்களுக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 15 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா சிறப்பு சிகிச்சை: மருத்துவர், செவிலியருக்குச் சிறப்பு ஊதியம்