தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினம்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வந்தவர்களால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வந்த 5,278 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) ஒரே நாளில் மட்டும் 86 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது மட்டுமின்றி தொற்றால் 60 வயதான மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் இறப்பு எண்ணிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.