கரோனா பாதிப்பினால் பரிதவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பழம், தேங்காய், காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
இதன் மாநில செயலாளர் தில்லை செல்வம் தலைமையில் 500 ஏழை குடும்பங்களுக்கான நிவாரண பொருள்களை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ்ராஜன் வழங்கினார்.
இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!